ETV Bharat / state

பொங்கல் பண்டிகை - பாரம்பரியக் கலைகளுடன் கொண்டாட்டம் - Racampalaiyam people celebrate pongal function with lot of traditional games

ஈரோடு: பொங்கல் பண்டிகை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுப் போட்டுகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

பாரம்பரிய பொங்கல்
பாரம்பரிய பொங்கல்
author img

By

Published : Jan 17, 2020, 12:47 PM IST

ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் அருகேயுள்ள எஸ்.எஸ்.பி. நகரின் மக்களும், வஜ்ரம் சிலம்பாட்டக் கழகமும் இணைந்து தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடினர். அதில், சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர்கள் தமிழ் பாரம்பரியக் கலையான சிலம்பம் விளையாடினர்.

இதைத் தொடர்ந்து, விழாவில் நடைபெற்ற வாள் சண்டை, சிலம்பாட்ட சண்டை, பரதநாட்டியம், உறியடி, பறை இசை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

பாரம்பரிய பொங்கல்

இதுகுறித்து சிலம்பாட்ட கலைஞர்கள் கூறுகையில்,"பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம் கலைகளைப் பாதுகாத்திட முடியும்" என்றார்.

இதையும் படிங்க: நீலகிரியில் கடவுள் வேடமிட்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன16

பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம்!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையத்தில் பொங்கல் வைத்து பாரம்பர்ய முறையில் சிலம்பாட்டம், தப்பாட்டம், பரதநாட்டியம், கண்ணைக்கட்டிக் கொண்டு உறியடித்தல் போன்றவை வெகு உற்சாகத்துடன் நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் அருகேயுள்ள எஸ்.எஸ்.பி நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் மற்றும் வஜ்ரம் சிலம்பாட்டக் கழகம் ஆகியவற்றின் சார்பில் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாட்டை பொங்கல் பானைகளின் மத்தியில் கொண்டு வந்து நிறுத்தி பொங்கல் வைத்து மாட்டிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாரம்பர்யக் கலையான சிலம்பக் கலையில் உள்ள அனைத்து வகை விளையாட்டுக்களையும் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவ,மாணவியர்கள் பார்ம்பர்ய உடையணிந்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வாரியாக அனைத்து சிலம்பப் பயிற்சி கலைஞர்களும் தங்களது பயிற்சியை வெளிக்காட்டி பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றனர். மேலும் பயிற்சிக் கலைஞர்களிடையே வாள் சண்டை, சிலம்பாட்ட சண்டைகளூம், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மேலும் தமிழின் தொன்மை இசைக் கருவியான பறை இசையுடன் அனைத்து பயிற்சிகளையும் பயிற்சி மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து காட்டினர். மேலும் சிலம்பப் பயிற்சியின் மூலம் பெற்ற வலிமையின் மூலம் ஊசி கொண்டு உயரத்தில் கட்டி விடப்பட்ட பலூன்கள் உடைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கண்களைக் கட்டிக் கொண்டு உயரத்தில் கட்டி விடப்பட்ட பானையை உடைக்கும் உறியடிப் போட்டியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உறியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்தனர்.

Body:தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது இதுபோன்ற பாரம்பர்ய கலைகளை வெளிப்படுத்தி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவதன் மூலம் கலைகளை பாதுகாத்திட முடியும் என்றும், இதுபோன்ற கலைகளை வெளிப்படுத்தியபடி பொங்கலைக் கொண்டவது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிலம்பாட்ட கலைஞர்கள் தெரிவித்தனர்.

Conclusion:கலைகளைப் பாதுகாத்திட தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியினைச் சேர்ந்த மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.