ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.
சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், புஞ்சைபுளியம்பட்டி, அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து கால்நடைகளை விலைபேசி வாங்கிச் செல்வர்.
இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு கோடிக் கணக்கில் வர்த்தகம் நடைபெறும் நிலையில், தைப் பொங்கல் தினமான இன்று கூடிய மாட்டுச் சந்தையில் மாடுகளின் வரத்து 100ஆக குறைந்தது. விவசாயிகள் மாடுகளை கொண்டு வராத நிலையில் வியாபாரிகளும் குறைவாக வந்திருந்தனர். இதன் காரணமாக புஞ்சை புளியம்பட்டி மாட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க...சேலம் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனை மிகுதி!