ETV Bharat / state

தாளவாடியில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுப்பணித் துறை நடவடிக்கை - நெடுஞ்சாலைத்துறை

தாளவாடி கடை வீதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர்.

road_eviction
road_eviction
author img

By

Published : Oct 5, 2020, 5:33 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி பகுதியில் பேருந்து நிலையம், சத்தியமங்கலம் சாலை, தலமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக தொடர் புகார் எழுந்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்டவர்களிடம் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்திருந்தனர். கடைக்காரர்கள் அதனைக் கண்டுகொள்ளாததால், இன்று (அக்.5) 20-க்கும் அதிகமான காவல் துறை பாதுகாப்புடன், தாளவாடி பேருந்து நிலையம், சத்தியமங்கலம் சாலை, தலமலை செல்லும் சாலையிலுள்ள, 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் அகற்றினர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத் துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கூடுதல் அறுவடை இயந்திரங்கள் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.