பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் இருகரைகளை தொட்டபடி இந்த தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்கி குளிக்கின்றனர். ஆழமான பகுதி என்பதால் பொதுப்பணித்துறையினர் குளிப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில் பண்டிகை காரணமாக விடப்பட்ட தொடர் விடுமுறையில் பொதுமக்கள் விதிகளை மீறி குளித்து மகிழ்வதோடு, கரையோரம் செல்பியும் எடுத்துவருகின்றனர்.
அப்பகுதியில் வாய்க்காலின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்ட குழாய் மீது நடந்து சென்று நின்று ஆபத்தான முறையில் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர். கீழ்பவானி வாய்க்காலில் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் நிலையில் விடுமுறை காலங்களில் காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தீபாவளி விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!