ETV Bharat / state

இடிந்து விழும் அபாய நிலையில் அரசு மாணவர் விடுதிக் கட்டடம்: இடித்து அகற்றக் கோரிக்கை - ஈரோட்டில் பாழடைந்த அரசுக் கட்டடம்

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள அரசு மாணவர் விடுதி கட்டடத்தை இடித்து அகற்றக் கோரிக்கை எழுந்துள்ளது.

இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டடம்
இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டடம்
author img

By

Published : Dec 29, 2021, 6:46 PM IST

ஈரோடு:புஞ்சை புளியம்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட் பகுதியில், ஆதி திராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான பழைய மாணவர் விடுதிக் கட்டடம் உள்ளது.

பாழடைந்த கட்டடத்தை இடிக்கக் கோரிக்கை:

பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் கட்டடம் இருந்ததால், சில ஆண்டுகளுக்குமுன் மாணவர்கள் புதிய விடுதி கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர்.

தற்போது பழைய கட்டடச் சுவர்கள் விரிசல் அடைந்துள்ளதோடு மேற்கூரை காரைகள் பெயர்ந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

மேலும், இடிந்த கட்டடத்தில் மரங்கள் முளைத்து, வேர்கள் கட்டடத்தில் பரவியுள்ளதால் சுவர்களில் விரிசல் விட்டுள்ளது. தினசரி மார்க்கெட்டிற்கு வரும் மக்கள் ஆபத்தை உணராமல் வாகனங்களை விடுதி முன்பாக நிறுத்துகின்றனர்.

இரவு நேரங்களில் குடிமகன்கள் மது அருந்த பாழடைந்த கட்டடங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் புதர்கள் மண்டிக் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது.

இதனால் தினசரி மார்க்கெட்டிற்குக் காய்கறி வாங்க வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

புதியதாக மாணவர் விடுதி கட்டப்படுவதால், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் பழைய இடிந்த கட்டடம் அருகே இளைப்பாறிவருகின்றனர். இதனால் விபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே, பாழடைந்த அரசு மாணவர் விடுதிக் கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:Covid 19 case increases in chennai: சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.