ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கெட்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். கடந்த வாரத்தில் விளைநிலத்திற்கு வந்த ஒற்றை யானை, கரும்புத் தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியது மட்டுமின்றி மின்கம்பத்தின் மீது உரசிவிட்டு சென்றது. இதன் விளைவாக, மின் கம்பம் சாய்ந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.
இந்த மின்கம்பத்தில் உள்ள மின்பாதை வழியாக வீட்டு மின் இணைப்புகள் உள்ளதால் இந்த மின்கம்பம் கீழே விழும்பட்சத்தில் கரும்பு தோட்டம் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தாளவாடி மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டும் மின்கம்பத்தை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவால் கைதான பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்!