ETV Bharat / state

தடையை மீறி பரிசல் இயக்கிய தெங்குமரஹாடா மக்கள் - ஈரோடு, சத்தியமங்கலம், தெங்குமரஹாடா,

ஈரோடு: மாயாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்ததை மீறி தெங்குமரஹாடா மக்கள் பரிசல் இயக்கியுள்ளனர்.

river-transport
author img

By

Published : Sep 6, 2019, 1:21 PM IST

ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ள கிராமம் தெங்குமரஹாடா. இப்பகுதியைச் சுற்றி மாயாறு ஓடுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை சாலை வசதி கிடையாது எனபதால் அவர்கள் மாயாற்றில் பரிசல் பயணத்தை மட்டுமே பிரதான போக்குவரத்தாக பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், மாயாற்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கனமழையால் அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தெங்குமரஹாடாவில் பரிசல் இயக்குவது ஆபத்தானது என்பதால், பரிசல் போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் தடைசெய்து உத்தரவிட்டது.

தடையை மீறி பரிசல் இயக்கிய தெங்குமரஹாடா மக்கள்

இதனைத்தொடர்ந்து, கிராமத்தை விட்டு மக்கள் வெளியேற முடியாததால், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி பரிசல் இயக்கிவருகின்றனர். ஆபத்தை உணராமல் பரிசல் இயக்கப்படுவது காண்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மாயாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைத்துதர தெங்குமரஹாடா கிராம மக்கள் கடந்த சில மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை-வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசலில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை

நீலகிரி வனப்பகுதி கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலை்பகுதியில் இருந்து அருவியாக கொட்டும் மழைநீர் மாயாற்றில் கலப்பதால் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே மாயாற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பைக்காரா அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் மாயாற்றில் பைகாரா உபரிநீரும் கலந்து மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தெங்குமரஹாடாவில் பரிசல் இயக்குவது ஆபத்தானது என்றும் பொதுமக்கள் ஆபத்தான பயணத்தை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா பரிசல் இயக்க தடை விதித்துள்ளார்கள் . இதன் காரணமாக இன்று முதல் மாயாற்றில் பரிசல் இயக்குவது நிறுத்தப்பட்டது. அதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கிராமத்தில் இருந்த பிற பகுதிகளுக்கு செல்லமுடியமாலம் தவித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேன்டும் என்றும் அதற்கு காலதாமதமாகும் என்றால் உடனடி தீர்வாக தெங்குமரஹாடாவில் ஓன்றும் கல்லம்பாளையம் பகுதியில் ஒன்றும் நடைபாலங்கள் அமைத்து சீரான போக்குவரத்து நடைபெற உதவுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கோரியுள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.