ETV Bharat / state

ஆன்லைன் வகுப்பு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வலியுறுத்தல் - செங்கோட்டையன் - பள்ளிக் கல்வித் துறை

ஈரோடு: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனச் சம்பந்தப்பட்டவர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.

minister-k-a-sengottaiyan
minister-k-a-sengottaiyan
author img

By

Published : May 29, 2020, 12:23 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆட்டோ, வாடகை கார், சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.

அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சிபிஎஸ்இயைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் கொள்கை முடிவுகள்தான் எடுக்கப்படும்.

அவர்களுக்கு தேர்வு மையங்கள் கூடுதலாக தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று சம்பந்தபட்டவர்களிடம் கூறியுள்ளோம்.

கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே படிக்க முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

தமிழ்நாடு அரசு, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக விடுதிகள் மூன்று நாள்கள் திறப்பதற்கும் மாணவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவர், "மாணவர்கள் எந்தப் பள்ளிகளில் படித்தார்களோ, அந்த பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என முதல்முறையாக தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 12 ஆயிரத்து 864 மையங்களில் சுமார் எட்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாமா? - அமைச்சரின் மாறுபட்ட பதில்களால் குழப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.