ETV Bharat / state

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கியதில் 8 பேருக்கு காயம் - latest tamil news

ஈரோட்டில் சபரிமலை பக்தர்கள் சென்ற வேனும் தனியார் பேருந்தும் நேருக்குநேர் மோதியதில் சபரிமலை பக்தர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

நேருக்கு நேர் மோதி விபத்து
நேருக்கு நேர் மோதி விபத்து
author img

By

Published : Dec 31, 2022, 2:27 PM IST

நேருக்கு நேர் மோதி விபத்து

ஈரோடு: சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது உறவினர்கள் 28 பேருடன் சபரிமலைக்கு மாலை அணிந்து நேற்றிரவு சென்னையில் இருந்து இரண்டு வேனில் புறப்பட்டுள்ளனர். இன்று காலை பண்ணாரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஈரோட்டிலிருந்து 50 பயணிகளுடன் கோபி பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, கவுந்தப்பாடி என்ற இடத்தில் சபரி மலை பக்தர்கள் சென்ற வேன் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணம் செய்த பக்தர்கள் 8 பேர் காயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான தனியார் பேருந்தில் பயணித்த தனியார் கல்லூரி மாணவிகள் 3 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த 3 மாணவிகளும் காயமடைந்தனர். இந்நிலயில் விபத்தில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து கவுந்தப்பாடி கவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பூக்கடைக்குள் புகுந்த கார் - சிறுவர்கள் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.