ETV Bharat / state

'விலைவாசி ஏறுது எங்க கூலி உயரல' - நெருக்கடியில் உழலும் நெசவாளர்கள்!

ஈரோடு: கைத்தறித் தொழிலின் நெருக்கடி நிலைமையைக் கண்ணோக்கி, அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே சென்னிமலை நெசவாளர்களின் நிறைவேற்றக்கூடிய கோரிக்கையாகும்.

விலைவாசி ஏறுது.. எங்க கூலி உயரல... நெருக்கடியில் உழலும் கைத்தறி நெசவாளர்கள்!

author img

By

Published : May 12, 2020, 11:28 AM IST

ஈரோடு மாவட்டத்தில் நெசவுத் தொழில்தான் பிரதானம். விசைத்தறித்தொழில் வளர வளர கைத்தறி வீழ்ச்ச்சியை நோக்கிப்போனது. விலை குறைச்சலாக, பளபளக்கும் விசைத்தறி ஆடைகளுடன், போட்டியிட முடியாமல் பின்வாங்கியது கைத்தறித்தொழில். இந்நிலையில், ஊரடங்கு ஏற்படுத்திய இடைவெளி, அந்தத் தொழிலை இன்னும் அதிகமாகப் பாதித்தது.

இது குறித்து சென்னிமலை நெசவாளர் சிவசுப்பிரமணி கூறுகையில், ”அரசு, கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தரவேண்டிய தள்ளுபடி மானியத் தொகை கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், கூட்டுறவுச் சங்கங்கள் நலிவடைந்துவருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கைத்தறித் தொழிலையே நம்பியுள்ளனர்.

நூல்
நூல்

ஏற்கனவே, குறைந்த கூலிக்கு நெய்து, சிரமமான சூழ்நிலையில்தான் வாழ்ந்துவருகிறோம். இந்நிலையில், 40 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு என்பது எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்துள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கியதைப் போல், இடைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கி அரசு இக்கட்டான சூழ்நிலையில் எங்களுடன் நிற்க வேண்டும். தப்பிப் பிழைத்துக் கிடக்கும் எங்கள் தொழிலை மீட்டெடுக்க உதவ வேண்டும்”என்றார்.

விலைவாசி ஏறுவதுபோல, கைத்தறியை நம்பி வாழும் நெசவாளர்களின் கூலி உயர்வதில்லை. ஆண்டுதோறும் கூலியை உயர்த்தினால்தான், இந்தத் தொழிலை அவர்களால் தொடர முடியும். இல்லையெனில், மாற்றுத்தொழிலைத் தேடி கைத்தறி நெசவாளர்கள் செல்லும் கட்டாய நிலை ஏற்படும்.

நெசவு கூடம்
நெசவுக்கூடம்

இது குறித்து சென்னிமலை நெசவாளர் நடேசன், “எனக்கு 60 வயது, பணி ஓய்வும் பெற்றுவிட்டேன். ஆனால், இன்னும் தறி ஓட்டிவருகிறேன். அது என் வாழ்வாதாரத் தொழில். தற்போது, கரோனா வந்ததால், தொழில் மிகவும் முடங்கிவிட்டது. நெய்வதற்கு நூலில்லை, தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது.

தொழில் இல்லாத சூழ்நிலையில், அரசுதான் உதவ வேண்டும். இழப்பிற்கேற்ப அரசு உதவினால், பொருளாதார நெருக்கடியைச் சமாளித்துவிடுவோம். ஒட்டுமொத்தமாக, அரசு உதவவில்லை எனச் சொல்லவில்லை.

சாயமேற்றும் இடம்
சாயமேற்றும் இடம்

ஊரடங்கில், இலவச அரிசி, பருப்பு போன்றவற்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதை வைத்து மட்டும் எப்படி வாழ? கையிருப்பு இன்றி, பால்கூட இப்போதெல்லாம் வாங்குவதில்லை. அரசு புரிந்துகொண்டு உதவ வேண்டும்” என அழுந்தச் சொன்னார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுழைந்தாலே, காதுகளில் பாயும் கைத்தறிகள் சத்தம் வெகுவாகக் குறைந்து, விசைத்தறிகளின் ஆரவாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

'விலைவாசி ஏறுது எங்க கூலி உயரல' - நெருக்கடியில் உழலும் நெசவாளர்கள்!

கைத்தறித் தொழிலின், நெருக்கடி நிலையை கண்ணோக்கி, அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்பதே சென்னிமலை நெசவாளர்களின், நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கையாகும்!

இதையும் படிங்க: 'கள்ளழகர் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட தேனூர் பாரம்பரியம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.