கரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. அதன்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருமி நாசினிகளாக மஞ்சளை தண்ணீர் லாரியில் கலந்து அதனை சாலைகளில் தெளித்து சிலர் தங்களது சமூக அக்கறையை காட்டியது மட்டுமல்லாமல் அதனை காட்சியாக பதிவு செய்து சமூக வலைதங்களில் பதிவிட்டுள்ளனர்.
கரோனா வைரஸை தடுக்க பொதுமக்கள் தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு, சுய தனிமைப்படுத்தலே போதுமானது என அரசு அறிவுறுத்திய போதும், சிலர் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க: 'தனித்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் இல்லை' - எம்.சி. சம்பத்