ETV Bharat / state

தேக்கமடைந்த துணிகள்... தொடங்கியது போராட்டம்: நாளொன்றுக்கு ரூ.10 கோடி உற்பத்தி பாதிப்பு - powerloom workers strike erode

ஈரோடு: ரையான் ரக துணி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும், இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் 15 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

erode
erode
author img

By

Published : Dec 29, 2019, 4:42 PM IST

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், ராசாம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இதில் 25 ஆயிரம் தறிகளில் தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை, 15 ஆயிரம் தறிகளில் காட்டன் ரகங்கள், 10 ஆயிரம் தறிகளில் ரையான் ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

துணிகள் தேக்கம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மீட்டர் ரையான் துணி, தற்போது 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் மீட்டருக்கு நான்கு ரூபாய்வரை தங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது என்பது விசைத்தறி உரிமையாளர்களின் குற்றச்சாட்டு. இதன் காரணமாக ஈரோட்டில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான ரையான் துணி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன.

  • ரையான் துணி ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரையான் துணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும்

என்பதை வலியுறுத்தி, இன்றுமுதல் வரும் ஜனவரி 12ஆம் தேதிவரை 15 நாள்களுக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் - சுரேஷ்

இதனால் நாளொன்றுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: விசைத்தறி உரிமையாளர் தற்கொலை : மத்திய, மாநில அரசுகள் காரணம் என கடிதம்!

Intro:ஈரோடு ஆனந்த்
டிச29

ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

ரையான் ரக துணி ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது 15 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், ராசாம்பாளையம், லக்காபுரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இதில் 25 ஆயிரம் தறிகளில் தமிழக அரசின் இலவச வேட்டி சேலையும்,15 ஆயிரம் தறிகளில் காட்டன் ரகங்களும் 10 ஆயிரம் தறிகளில் ரையான் ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மீட்டர் ரையான் துணி தற்போது 20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் மீட்டருக்கு 4 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது என்பது விசைத்தறி உரிமையாளர்களின் குற்றச்சாட்டு.

இதனால் ஈரோட்டில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான ரையான் துணி ரகங்கள் தேக்கமடைந்துள்ளன. Body:இந்த நிலையில் ரையான் துணி ஏற்றுமதி செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனா, வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரையான் துணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றுமுதல் வரும் 12 ம் தேதிவரை 15 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்த போராட்டத்தை விசைத்தறி உரிமையாளர்கள் தொடங்கியுள்ளனர்.

Conclusion:இதனால் நாள் ஒன்றுக்கு 10 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டி : சுரேஷ் - தலைவர்,ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.