ஈரோடு மாநகரத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் தோல் ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. கழிவு நீரை முறையாக சுத்திகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறையின் சார்பில் இந்த ஆலைகளுக்கு தொடர்ந்து அறிவுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும் ஒருசில ஆலைகள் அப்படி செய்வதில்லை. அவ்வாறு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுரைகளை பின்பற்றாமல், சாய கழிவுகளை நீர் நிலைகளில் வெளியேற்றும் ஆலைகளின் மின் இணைப்புகள் மற்றும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு பெரிய சேமூர், வெட்டுக்காட்டு வலசு, ஆர்.என்.புதூர், கங்காபுரம், வீரப்பன் சத்திரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சாய சலவை ஆலைகள் மற்றும் அச்சுத்தொழிற்சாலைகளும் அருகில் உள்ள கால்வாய்களில் சாயக்கழிவு நீரை இரவு நேரங்களில் வெளியேற்றுவதாக மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அலுவலர்களுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் துறையின் பொறியியலாளர் உதயகுமார் தலைமையிலான அலுவலர்கள், அங்கிருந்த ஆலைகளில் ஆய்வு செய்த போது சாயக்கழிவு நீர் நீர்நிலைகளில் வெளியேற்றுப்படுவது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அந்த ஆலைகளின் மின் இணைப்புகளை அலுவலர்கள் துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் இது போன்ற சாயக்கழிவுநீரை தொடர்ந்து வெளியேற்றினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அலுவலர்கள் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: 'குரங்கணி ட்ரெக்கிங் இப்போ போக முடியாதுங்க...' - காரணம் இதுதானா?