நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் செயல்பட்டு வந்த வாரச்சந்தை தற்போது புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இட நெருக்கடியை தவிர்த்து விசாலமான இடத்தில் காய்கறிகடைகள் சமூக இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் 1 மீட்டர் தூரத்தில் நின்று ஒருவருக்கொருவர் வரிசையாக பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் திரியும் நபர்களை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் காவல் துறையினர் செயல்படுவதால் ட்ரோன் மூலம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியை கண்காணித்து வருகின்றனர். இதனால்,மக்கள் அதிகமாக கூடியிருக்கும் பகுதியை கண்டறிந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் அங்கு சென்று, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலையிலிருந்து சொந்த நாடுகளுக்கு செல்லும் பயணிகள்