கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பொதுப்போக்குவரத்து தற்காலிமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே தரைவழி மார்க்கமாக அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் தினந்தோறும் கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து முட்டைக்கோஸ் ஏற்றிவந்த பிக்கப் வேனை, பண்ணாரி சோதனைச் சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது, காய்கறி மூட்டைகளில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள குட்கா, தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் பாக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேன் ஓட்டுநர் செல்வம் என்பவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: பாம்பை வைத்து மனைவியைக் கொன்றவரிடம் தீவிர விசாரணை!