ETV Bharat / state

கடம்பூர் மலைச்சரிவில் குதித்து காவலர் தற்கொலை

ஈரோடு அருகே குடும்பப் பிரச்சனைக் காரணமாகக் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடம்பூர் மலைச்சரிவில் குதித்து காவலர்  தற்கொலை
கடம்பூர் மலைச்சரிவில் குதித்து காவலர் தற்கொலை
author img

By

Published : Feb 26, 2022, 1:52 PM IST

ஈரோடு: பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் ஜீப் ஓட்டுநராக வேலுச்சாமி பணியாற்றி வந்தார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பங்களாப்புதூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் வேலுச்சாமிக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக விரக்தியில் இருந்தார்.

இந்நிலையில், குடும்பப் பிரச்னைக் காரணமாக இரு நாள்கள் விடுப்பும் எடுத்துள்ளார். இதனையடுத்து, கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்று விட்டு கடம்பூர் மலைப்பாதை மல்லியம்தூர்க்கம் போன்பாறை என்ற இடத்தில் மலைச்சரிவில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தற்கொலைக்கு முயன்ற வேலுச்சாமியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

20 அடி மலைச்சரிவில் மரக்கிளையில் சிக்கிய அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாகஉயிரிழந்தாார். இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:உக்ரைன் மீதான போரை தடுக்க உலக நாடுகள் முயற்சி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.