ETV Bharat / state

மனநலம் பாதிக்கப்பட்டவர் கொடூரக் கொலை: லோடுமேன் கைது

author img

By

Published : Jul 23, 2021, 7:14 AM IST

ஈரோட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து உடலை எரித்த லோடுமேனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் கொடூரமாக கொலை
மனநலம் பாதிக்கப்பட்டவர் கொடூரமாக கொலை

ஈரோடு: சுண்ணாம்புஓடை பாலக்காட்டூரைச் சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட அசேன் அலி (51). இவர் ஜூலை 21ஆம் தேதி காலை கருங்கல்பாளையம் நஞ்சப்பா நகர் மயானத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுகிடந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சந்தேகத்தில் ஒருவர் கைது

இந்நிலையில், இக்கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஈரோடு ஆர்.என்.புதூர் அமராவதி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பிரகாஷ் பழைய இரும்பு கடையில் லோடுமேனாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட அசேன் அலி, பிரகாஷின் முகத்தில் எச்சில் துப்பியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது.

தலையில் கல்லை போட்டு கொலை

இந்நிலையில், ஜூலை 20ஆம் தேதி இரவு நஞ்சப்பா நகரில் நடந்து சென்று கொண்டிருந்த அசேனுக்கும், பிரகாஷுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் அசேன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை அருகிலிருந்த துணிகளை வைத்து எரித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தென்காசியில் இளம்பெண் வெட்டிக்கொலை- பரபரப்பு தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.