ETV Bharat / state

புத்தாண்டு விடுமுறை: பவானிசாகர் அணைப் பூங்காவில் குவிந்த மக்கள் - ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான பவானி சாகர் அணைப் பூங்காவில் புத்தாண்டு விடுமுறையைக் காண ஏராளமான மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆங்கில புத்தாண்டு விடுமுறையை கொண்டாட பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த மக்கள்

author img

By

Published : Jan 1, 2023, 6:52 PM IST

ஆங்கில புத்தாண்டு விடுமுறையை கொண்டாட பவானிசாகர் அணைப் பூங்காவில் குவிந்த மக்கள்

ஈரோடு: மக்களின் முக்கிய பொழுபோக்கு அம்சமாக பவானிசாகர் அணை பூங்கா உள்ளது. பவானிசாகர் அணையின் முன்பகுதியில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள அணைப்பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்டப் பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வசதிகள் உள்ளன.

இங்கு பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்று விடுமுறை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு தினம் என்பதால் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பவானிசாகர் அணைப்பூங்காவிற்கு வந்தனர்.

பூங்காவில் குடும்பத்துடன் பொழுது போக்கிய பார்வையாளர்கள், ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் தண்ணீர் வற்றிய நிலையில் படகு சவாரி இல்லாததால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்; புதுக்கோட்டையில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.