கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரிலிருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் சென்றுள்ளது. அப்போது ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் நிலைதடுமாறி, சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
![விபத்தில் சிக்கிய சரக்கு வாகனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-05-sathy-tomoto-van-photo-tn10009_17042020201649_1704f_1587134809_789.jpg)
இவ்விபத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மேலும் வாகனத்திலிருந்த தக்காளிப் பெட்டிகள் சாலையில் சிதறி கிடந்துள்ளன. இதைக்கண்ட அப்பகுதி மக்களும், சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல், சாலையோரத்தில் சிதறிக் கிடந்த தக்காளிப் பழங்களை எடுத்துச்செல்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
![தக்காளி பழங்களை அள்ளும் ஆர்வத்தில் பொதுமக்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-05-sathy-tomoto-van-photo-tn10009_17042020201649_1704f_1587134809_1026.jpg)
இதனையடுத்து விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஓட்டுநரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தினால் நம்முடைய மனிதநேயமும், கரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் வேண்டும் என்ற அரசின் நிபந்தனையும், பொதுமக்கள் தக்காளிப் பழங்களை அள்ளுவதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, காற்றில் பறந்துவிட்டது என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மே நான்காம் தேதி தனியார் பள்ளி அலுவலகம் செயல்பட கோரிக்கை