ETV Bharat / state

கரோனா காரணமாக அரசுப் பள்ளி பக்கம் கவனம் செலுத்தும் பெற்றோர்கள்! - மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு: கரோனா தொற்றின் காரணமாக பெருநகரங்களிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர், இது குறித்து ஒரு சிறப்புப் பார்வை.

மாணவர்கள் சேர்க்கை குறித்து பேசும் தலைமை ஆசிரியர்

author img

By

Published : Oct 1, 2020, 12:31 PM IST

கரோனா தொற்றின் தீவிரம் இன்னும் தீராத நிலையில் பிழைப்புக்காக வெளியூர்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கே திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தங்களது குழந்தைகளையும் பொருளாதாரச் சூழல் காரணமாக, அருகிலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்த்து வருகின்றனர். இது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.

கரோனா தொற்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் அதன் கோரப்பிடியிலிருந்து இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ளது. இந்த கரோனா காரணமாக பல்வேறு தொழில் துறைகள், வேலைவாய்ப்புகள், சுயதொழில்கள், உற்பத்தி சார்ந்த தொழில்கள் என அனைத்தும் நொடிந்துபோய் செய்வதறியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு தொழில்களுக்காக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்குச் சென்றவர்கள், அங்கேயே தங்கி பணிபுரிந்தவர்கள் படிப்படியாக தங்களது சொந்த ஊர் திரும்பினர். இயல்பு நிலை திரும்பியவுடன் மீண்டும் வேலைக்குப் போகலாம் என்று நினைத்தவர்களின் எண்ணமெல்லாம் மண் மூடிப்போனது.

இதனால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளின் படிப்பையும் அப்படியே பாதியில் விட்டுவிட்டு செய்வதறியாது திகைத்துள்ளனர். கரோனாவால் பள்ளிகளும் கடந்த ஆறு மாதங்களாக திறக்கப்படவில்லை. இதனிடையில் ஆன்லைன் கல்வி, பாடப்புத்தக விநியோகம், மாணவர் சேர்க்கை உள்ளிட்டவையும் நடைபெற்று வருகிறது. வெளியூரில் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்த பெற்றோர்கள் பலர், இனி மேற்கொண்டு அங்கு செல்ல வழியில்லை என அறிந்து தங்களது குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இதனால் அரசுப்பள்ளிகளில் கணிசமாக மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி கூறும்போது, 'ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா காரணமாக தாமதமாக நடைபெறும் மாணவர்கள் சேர்க்கை, பள்ளிகள் தரப்பில் தங்களுக்குப் புதுவிதமான அனுபவமாக உள்ளது.

தற்போது கரோனா காரணமாக பெருநகரங்களில் பணியாற்றியவர்கள் புலம்பெயர்ந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டனர். இத்தகையவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் பரிமாற்ற சான்றிதழ் (TC) இல்லாமல் சேர்த்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் அவர்கள் தங்கியிருக்கும் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில், தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இது அரசுப்பள்ளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்' என்கிறார்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழலில் தனியார் பள்ளிகளுக்குச் சென்று பணத்தை செலவு செய்து, படிக்க வைக்க முடியாத நிலை உள்ளது. அதனால் அத்தகைய பெற்றோர்களின் பார்வையும் அரசுப்பள்ளி பக்கம் திரும்பியுள்ளது. அரசுப் பள்ளிகளும் தற்போது தங்களது தரத்தை மேம்படுத்தியுள்ளன. இணைய வசதி, ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட வசதிகள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள் சேர்க்கை குறித்து பேசும் தலைமை ஆசிரியர்

அதன் காரணமாக தனியார் பள்ளியிலிருந்து அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது தெரிகிறது. இது குறித்து பெற்றோர் ஈஸ்வரி கூறுகையில், 'தானும் தனது கணவரும் பணி நிமித்தமாக அருகிலுள்ள ஊரில் கடந்த பத்து ஆண்டுகளாக தங்கி, பணியாற்றி வந்தோம். இந்த கரோனா காரணமாக மேற்கொண்டு அங்கு தங்கிப் பணியாற்றும் சூழல் ஏற்படாததால் ஈரோட்டிலுள்ள தங்கள் சொந்த ஊருக்கே வந்துவிட்டோம்.

ஏற்கெனவே இருந்த இடத்திலுள்ள தனியார் பள்ளியில் எங்களது மகன் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அங்கு தொடர முடியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம். டிசி தேவையில்லை என்று அரசு அறிவித்ததையடுத்து எங்கள் வீட்டின் அருகிலுள்ள மாணிக்கம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியிலேயே எங்களது மகனை சேர்த்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

இந்த கரோனா தொற்றால் பல்வேறு சோதனைகள் மோசமான நினைவுகள் ஏற்பட்டிருந்தாலும்; இதன் காரணமாகப் பெற்றோர்களின் தனியார் பள்ளி மோகம் குறைந்து, மீண்டும் அரசுப்பள்ளியின் பக்கம் திரும்புவது வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.

இதையும் படிங்க: கற்பித்தலில் புதுமை: எட்டாக் கனியாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.