ETV Bharat / state

அச்சுறுத்தும் கொரோனா: பண்ணாரிஅம்மன் கோயில் விழா நடைபெறுவதில் சிக்கல்!

ஈரோடு: பிரசித்திப் பெற்ற பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவதால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறுதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழாவில் சிக்கல்

author img

By

Published : Mar 15, 2020, 9:56 AM IST

ஈரோடு மாவட்டம் பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா வரும் மார்ச் 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதில், ஏப்ரல் 7ஆம் தேதி முக்கிய நிகழ்வான குண்டம் விழா நடைபெறும். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

தமிழ்நாடு, கர்நாடகத்தில் பிரசித்திப்பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் பங்குனி மாதம் பெளர்ணமி நாளன்று நடைபெறும். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் குண்டம் விழாவில் பங்கேற்பர்.

இந்நிலையில், விழாவுக்கான தற்காலிகப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், இக்கரை நெகமம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் வீதியுலா வரும்.

அம்மன் சப்பரத்தை கோயில் பக்தர்கள் சுமந்தபடி கிராமங்களில் உலாவரும். சப்பரத்தை தொட்டு பக்தர்கள் வணங்குவர். மார்ச் 31ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 6ஆம் தேதி குண்டம் பெருந்திருவிழா நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி தீமிதி விழாவும் நடைபெறுகிறது. 8ஆம் தேதி புதன்கிழமை புஷ்பரதம், 9ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, 10ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 13ஆம் தேதி மறுபூஜைத் திருவிழா நடைபெறும்.

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவில் சிக்கல்

இந்த நிகழ்ச்சி நிரல்படி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கோயில் நிர்வாகம் ஆலோசித்துவருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவதால் கோயில் குண்டம் விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜெயின் கோயிலின் ஆண்டு கொடியேற்றம் நடைபெற்றது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.