ETV Bharat / state

கோபிசெட்டிபாளையத்தில் களைகட்டிய மாரத்தான் போட்டி - Erode Marathon Competetion

ஈரோடு: பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Erode
author img

By

Published : Sep 7, 2019, 2:51 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளுக்கிடையேயான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 35 கல்லூரிகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இப்போட்டியானது 10 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, கோபி கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கி, நஞ்சகவுண்டம்பாளையம், கச்சேரிமேடு பேருந்துநிலையம், நாயக்கன்காடு பகுதிக்கு சென்று மீண்டும் கல்லூரியை அடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என போட்டிகள் இரு பிரிவுகளாக நடைபெற்றது.

அதில், ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் ஆறு பேரும் அதேபோல் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பிடிக்கும் ஆறு பேரும் அகில இந்திய மாரத்தான் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதேசமயம், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு கல்லூரி சாம்பியன் சிப் பட்டம் வழங்கப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மாரத்தான் போட்டி

முன்னதாக இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி எஸ்.டி.சி. கல்லூரியைச் சேர்ந்த விஷ்ணு, டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியைச் சேர்ந்த கிருபாகரன், மணிகண்டன், கோகுல் - ஜானகியம்மாள் கல்லூரியைச் சேர்ந்த அருண், ரமேஷ் ஆகியோர் முதல் ஆறு இடங்களைப் பிடித்தனர். இவர்கள் மங்களூருவில் நடைபெறும் ஆண்களுக்கான அகில இந்திய மாரத்தான் போட்டிக்கு தகுதிபெற்றனர்.

அதேபோல், பெண்கள் பிரிவில் கோபி கலைக்கல்லூரியிலிருந்து திவ்யா, லீமாரோகிணி, சுகன்யா - ஜானகியம்மாள் கல்லூரியிலிருந்து பவித்ரா, திவ்யா, நிர்மலா கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீநிவிதா ஆகியோர் ஆந்திராவில் நடைபெறும் பெண்களுக்கான அகில இந்திய மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

Intro:Body:tn_erd_02_sathy_marathon_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டிபாளைத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்கிடையே ஆன மாரத்தான் போட்டியில் 35 கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டிபாளைத்தில் செயல்படும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரிகளுக்கிடையே ஆன மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாரதியார் பல்கலைக்கழத்திற்குட்பட்ட 108 உறுப்புக்கல்லூரிகளில் 35 கல்லூரிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டிக்கு 10 கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில் கோவை திருப்பூர் ஈரோடு நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்திருந்த கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியானது கோபி கலை அறிவியல் கல்லூரியில் தொடங்கி நஞ்சகவுண்டம்பாளையம் கச்சேரிமேடு பேருந்துநிலையம் வழியாக சென்று நாயக்கன்காடு பகுதிக்கு சென்று திரும்பி மீண்டும் கல்லூரியை அடையுமாறு அமைக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் பிரில் ஆறு பேரும் பெண்கள் பிரிவில் ஆறு பேர் அகில இந்திய மாரத்தான் போட்டியில் பங்கேற்றும் வாய்ப்பை பெறுவார்கள் என்றும் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் வீரர் வீராங்கனைகள் கல்லூரி சாம்பியன் சிப் பட்டம் வழங்கப்படும் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக இரு போட்டிகளையும் கோபி கலைக்கல்லூரியின் தலைவர் கருப்பணன் செயலாளர் தரணிதரன் முதல்வர் தியாராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் பொள்ளாச்சி எஸ்டிசி கல்லூயைச்சேர்ந்த வி~;ணு டாக்டர் என்.ஜி.பி கல்லூரியைசேர்ந்த கிருபாகரன் மணிகண்டன் கோகுல் ஜானகியம்மாள் கல்லூரியைச்சேர்ந்த அபிலே~; அருண் ரமேஸ் ஆகியோர் முதல் ஆறு இடங்களைப்பிடித்த ஏழு பேரும் பெண்கள் பிரிவில் கோபி கலைக்கல்லூரியை சேர்ந்த திவ்யா, லீமாரோகிணி, சுகன்யா, ஜானகியம்மாள் கல்லூரியைச்சேர்ந்த பவித்ரா, திவ்யா மற்றும் நிர்மலா கல்லூரியைச்சேர்ந்த ஸ்ரீநிவிதா ஆகியோரும் முதல் ஆறு இடங்களை பிடித்து மங்க;ரில் நடைபெறும் ஆண்களுக்கான அகில இந்திய மாரத்தான் போட்டியிலும் ஆந்திராவில் நடைபெறும் பெண்களுக்கான அகில இந்திய மாரத்தான் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.