தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாலும், வைரஸ் தொற்று குறித்த பீதியாலும் பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.
தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, மறு தேர்வு எழுதாத மாணவர்களின் விருப்பம் கேட்கப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 31பேர் மட்டுமே மீண்டும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இவர்களுக்கு தேர்வு அனுமதிச்சீட்டு ஆன்லைன் மூலமாகவும், அவர்கள் படித்த பள்ளியின் வாயிலகாவும் கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில், இன்று (ஜூலை 27) நடைபெற்ற மறுதேர்வில் 31 பேரும் தேர்வு எழுதினர். ஈரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பவித்ரா என்கிற ஒரு மாணவி மட்டும் தேர்வெழுதியபோதும், பொதுத்தேர்வுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டன. ஒரு மாணவிக்காக 20க்கும் மேற்பட்ட கல்வித்துறையினர், ஆசிரியர் குழுக்கள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்விற்குப் பலர் வரவில்லை!