ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் வனப்பகுதியில் நக்சல் பிரிவு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொங்கர்பாளையம் முட்புதரில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இதனைக் கைப்பற்றிய நக்சல் பிரிவு காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். அதில், நாட்டுத்துப்பாக்கி தோப்பூர் அய்யணன் என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்ற தந்தை