ETV Bharat / state

கட்டட தொழிலாளி கொலையில் ஒருவர் கைது! - கட்டிட தொழிலாளி கொலையில் ஒருவர் கைது

ஈரோடு: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் உடன் பணியாற்றிய சக தொழிலாளியை ஈரோடு மாநகரக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Culprit
Culprit
author img

By

Published : Oct 29, 2020, 10:27 PM IST

ஈரோடு கடைவீதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு பகுதியில் பலரும் இரவு நேரங்களில் கடைகளுக்கு முன் படுத்துறங்கி பகல் நேரத்தில் கட்டடப் பணிகளுக்கும், யாசகம் எடுத்தும் பிழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த பெருமாள் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக மணிக்கூண்டு பகுதியில் இரவு நேரத்தில் கட்டடத் தொழிலாளர்களுடன் தங்கி பகல்நேரத்தில் அவர்களுடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கிடையில், நேற்று முன்தினம் பெருமாள் தனது நண்பர்களுடன் மதுக்குடித்து விட்டு மணிக்கூண்டு பகுதியிலுள்ள கடையின் முன்பாக அமர்ந்து உணவருந்திக் கொண்டுள்ளார்.
அப்போது, அங்கு மதுபோதையில் வந்த சேலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்கிற கட்டடத் தொழிலாளி தன்னிடம் வாங்கிய பணத்தை உடனடியாக திருப்பி வழங்கிட வேண்டும் என்று கேட்டு பெருமாளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இருவரும் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் தான் மறைத்து வைத்திருந்த சிமெண்ட் மூட்டைகள் அறுக்கும் கத்தியைக் கொண்டு பெருமாளின் கழுத்தை அறுத்தார். ரத்தம் வழிய மயங்கி சரிந்து விழுந்த பெருமாளைக் கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இதில் பயந்து போன லட்சுமணன் தப்பிச் சென்றார்.
உடனிருந்த கட்டடத் தொழிலாளிகள் ரத்தக்காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பெருமாளை உடனடியாக மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு பெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதைத் தெரிவித்துள்ளனர். கொடூரமான கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த மாநகரக் காவல்துறையினர், தலைமறைவாகியிருந்த லட்சுமணனை கைது செய்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் பெருமாள் தன்னை விடவும் அதிக கட்டடப் பணிக்கு சென்று வந்த போதும் தன்னிடம் பெற்ற பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடித்ததுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததால் மதுபோதையில் அவரை கழுத்தை அறுத்து விட்டதாக இலட்சுமணன் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினார்.

இதையடுத்து காவல்துறையினர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.