பின்னர் பேசிய அவர், "தமிழகத்தில் மட்டும் 1.82 லட்சம் பொறியியில் பட்டதாரிகள் வேலை தேடி வருகின்றனர் . ஆனால் கலைக்கல்லூரியல் படித்தவர்கள் ஏதாவது ஒருவேலையை தேடிக்கொள்கின்றனர். இந்தியாவில் உயர்கல்வி சதவீதம் 26 ஆக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டுமே 48.91 சதவீதம் உயர்கல்வி பயிலுகின்றனர். எழை எளிய மக்களும் படிக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சத்துணவு திட்டத்தை சிறப்பாக நடத்தினர்.
அடுத்த ஆண்டு முதல் பிளஸ் டு பாடத்தில் திறமையை வளர்த்துக்கொள்ளும் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஒரு லட்சம் எல்கேஜி வகுப்புறைகள் கட்டப்படும். அடித்தட்டு மக்களும் சரளமாக ஆங்கிலம் பேச 6 முதல் 8 வகுப்பு வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட்டுவாழ்க்கை காட்டில் தான் உள்ளது. மாணவர்கள் பாசத்துடன் பெற்றோர், உறவினர்களை அரவணைத்து கல்வி கற்க வேண்டும்", என்றார்.