ETV Bharat / state

தமிழ்நாட்டைப் பற்றி ஓடிசா அரசுக்கு பொய்யான தகவலளித்த தொழிலாளர்கள் கைது

ஈரோடு: தமிழ்நாடு அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என ஒடிசா மாநில தலைமை செயலகத்துக்கு பொய்யான தகவல் கொடுத்த ஒடிசாவை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

author img

By

Published : Apr 3, 2020, 12:15 PM IST

odisha
odisha

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஒடிசா மாநிலம், ஜகத்சிங்பூர் மாவட்டம், கனகுளி பகுதியை சேர்ந்தவர் லக்ஷிமர் ரூட். இவரது மகன் திரிநாத் ரூட் (19). அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹெந்துஜ்கர் மாவட்டம், நந்தபார் பகுதியை சேர்ந்தவர் குருடா ஜெனா என்பவரது மகன் சுனில் ஜெனா (28).

இவர்கள் இருவரும், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கவுண்டனூரில் தங்கியிருந்து பெருந்துறை சிப்காட்டில் உள்ள வெவ்வேறு தனியார் நிறுவனங்களில் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இவர்கள் வேலை செய்த நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது போல் இவர்களுக்கும் வாடகை இல்லாமல் 2 மாதங்களுக்கு தங்கும் வசதி, உணவு, உடை போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், இவர்கள் இருவரும் கடந்த 1ஆம் தேதியன்று ஒடிசாவில் உள்ள அரசு தலைமை செயலகத்துக்கு போன் செய்து எங்களுக்கு உணவு உள்பட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என பொய்யாக தகவல் கொடுத்ததுடன், குறுந்தகவலும் அனுப்பியுள்ளனர்.

பின்னர் ஒடிசா மாநில தலைமை செயலக அலுவலர்கள் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்துள்ளனர். கிடைத்த தகவலின் அடிப்படையில், ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஈங்கூர் கிராம நிர்வாக அலுவலர் உதயராணி சென்னிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சத்திகணேஷ் உத்தரவின் பேரில் பெருந்துறை டி.எஸ்.பி. ராஜாகுமார் சென்னிமலை காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் பெயரை கெடுக்கும் வகையில் வேண்டுமென்றே பொய்யான தகவலை ஒடிசா தலைமை செயலகத்துக்கு அனுப்பியதாக ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திரிநாத் ரூட்டையும், சுனில் ஜெனாவையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்காக தயாராகும் ரயில் பெட்டிகள்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.