ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த ஓடத்துறை ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இதன் மூலம் 72 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
இந்த ஏரிக்கு கீழ்பவானி பிரதான கால்வாய்கள் மூலம் தண்ணீர் வருகிறது. ஏற்கனவே இந்த கால்வாய்கள் தூர்வாரப்பட்டன.
இந்நிலையில் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஓடத்துறை ஏரி நிரம்ப ஆரம்பித்தது. தற்போது பெய்து வரும் கனமழையால் ஏரி நிரம்பியது.
இதனால் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எனவே ஏரியை சுற்றியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: புரெவி புயல் எதிரொலி: ராமேஸ்வரத்தில் கனமழை