ETV Bharat / state

2026-இல் விஜய் வருகிறார்..! அப்போது கூட்டணி குறித்துப் பார்க்கலாம்; சீமான் பேச்சு

Actor Vijay political entry: 2026-இல் விஜய் நடிப்பதை விட்டுவிட்டு முழுவதுமாக அரசியலுக்கு வந்து விடுவார். அப்போது கூட்டணி குறித்துப் பார்க்கலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

NTK Coordinator Seeman said decision will be taken about the alliance when actor Vijay enters politics
சீமான் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2023, 4:43 PM IST

விஜய் வந்ததும் கூட்டணி குறித்து பார்க்கலாம்

ஈரோடு: கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி B.முருகேசன் முன்பு விசாரணைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். இந்நிலையில் இந்த வழக்கை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பாஜக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் திட்டமிட்டு சோதனை செய்கிறது. ஏன்..? தேர்தலுக்குக் குறுகிய காலம் இருப்பதால் அச்சுறுத்தல் நடவடிக்கை பாஜக மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் பாஜக, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை குறித்துக் கூறும் குற்றச்சாட்டு உண்மை, அதில் தவறு இல்லை” என்றார்.

இலங்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை ஒலிபரப்பப்படாதது குறித்த கேள்விக்கு, “இலங்கை நாடு ஜனநாயக நாடு எனச் சொல்பவர்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இலங்கை ஜனநாயக நாடு இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் அனைத்து தரப்பினரும் ராணுவத்தில் இடம் பெறலாம். ஆனால், இலங்கை நாட்டு ராணுவத்தில் தமிழர் எப்படிச் சேர முடியும்.

60 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ஆட்சியில் குழந்தைகளுக்கு ஒரு முட்டை கூட தரமானதாகக் கொடுக்க முடியவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு வழங்குவதைப் போல் அனைத்து குழந்தைகளுக்கும் உணவு வழங்க முடியவில்லை என்றால் எதற்கு அந்த திட்டம். எல்லாவற்றிலும் திராவிட ஆட்சியை எதிர்க்க நான் என்ன மனநோயாளியா. இதனால் பாஜக ரெய்டு குறித்து ஸ்டாலின் சொல்வதை வரவேற்கிறேன்.

இந்திராகாந்தி இருக்கும் வரை பாலஸ்தீன விடுதலையை ஆதரித்து பாலஸ்தீனம் பக்கம் மற்றும் ஈழ விடுதலைக்கு இந்தியா ஆதரவு தந்தது என்றார். நாகாலாந்து மக்கள் நாய் கறி சாப்பிடுவது குறித்த ஆளுநரின் கருத்து குறித்து பேசிய அவர், உணவு, உடை வழிபாடு என்பது அவர்கள் அவர்கள் உரிமை, விருப்பம். நாகாலாந்து மக்கள் மட்டுமா நாய் சாப்பிடுகிறார்கள், ஜப்பான், சீனா நாட்டில் சாப்பிடுவதில்லையா.?

மக்கள் உண்பதற்குத் தேவையான உணவை முதலில் உறுதி செய், அதை பிறகு எதைச் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய். முடியவில்லை என்றால் அப்புறம் ஏன் உணவு குறித்துப் பேசுகிறார்கள். உணவு என்பது அவர் அவரது விருப்பம். அகோரிகள் இறந்த மனிதர்களின் உடல்களைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு என்ன செய்தார்கள்..? அதைக் கேவலம் என்று பேசுவார்களா? காவிரியில் தண்ணீர் வராதபோது தமிழகத்தில் பாம்பு, எலிகறி சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது எங்கே போனார்கள்.

நடிகர் விஜய் படம் நடிப்பதை விட்டு விட்டு உறுதியாக 2026-இல் அரசியலுக்கு வருவார். வந்த பிறகு அவருடன் கூட்டணி குறித்துப் பேசி முடிவு சொல்லலாம். அவர் அரசியலுக்கு வந்த பின் அவரிடம் போய் கேளுங்கள், உங்கள் அண்ணனுடன் கூட்டணி வைப்பீர்களா என்று. தற்போது நான் தனித்துப் போட்டியிடுகிறேன். 20 தொகுதியில் பெண்களையும், 20 தொகுதியில் ஆண்களை நிறுத்திப் போட்டியிடுகிறோம்.

இதையும் படிங்க: சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.