ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகர் சாலையோரங்களில் நெடுஞ்சாலைத் துறையில் அதிகளவில் நாவல் மரங்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. தற்போது நாவல் சீசன் என்பதால் மரங்களில் பழங்கள் பழுத்து காய்த்திருக்கின்றன.
அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மரத்தில் ஏறி நாவல் பழங்களைப் பறிக்கின்றனர். சில இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மரத்தின் மீதேறி மரக்கிளையை உலுக்கி பழங்களை கீழே விழச் செய்கின்றனர்.
சிலர் நாவல் காயை உலரவைத்து அதனைப் பொடிசெய்து சர்க்கரை நோய்க்குப் பயன்படுத்துவதால் நாவல் காயும் விலை போகிறது. சாலையோர நாவல் பழங்களைப் பறிக்க நெடுஞ்சாலைத் துறையினர் ஏலம்விட்டுள்ளதால் ஒப்பந்ததாரர்கள் வாகன ஓட்டிகளை மரத்தில் பழத்தைப் பறிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பாதியில் நிறுத்தப்பட்ட ஓஎன்ஜிசி பணி: நிலத்தைச் சீரமைக்கக் கோரும் உழவர்கள்