தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய அலுவலகம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேவேந்திர குல வேளாளர்களை வேளாண் மரபினர்களாக அறிவிக்க வேண்டும். தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணையும் மத்திய அரசால் கொடுக்கப்பட வேண்டிய பட்டியலினத்திலிருந்து வெளியேற்றம் என்ற ஆணையும் தேவேந்திர குல மக்களால் நீண்டநாள்களாக கேட்கப்பட்டுவந்தது. இதனால்தான் இடைத்தேர்தலை தேவேந்திரகுல மக்கள் 100 விழுக்காடு புறக்கணித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சம் தேவேந்திர வேளாளர்கள் உள்ளனர். வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் எங்களின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது" என்றார்.
மேலும் தமிழ்நாட்டில் டெங்கு பரவாமல் தடுக்க அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தொழிலதிபர் வீட்டில் கைவரிசை: 48 மணி நேரத்தில் திருடன் கைது