Bhavanisagar Park: ஈரோடு: பவானிசாகர் அணையின் முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான அணை பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பவானிசாகர் அணை பூங்கா இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இந்தப் பூங்காவில் படகு இல்லம், ஊஞ்சல், சறுக்கு, கொலம்பஸ், சிறுவர் ரயில் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன்கூடிய விளையாட்டுச் சாதனங்களும், அழகிய புல்தரைகளும் உள்ளன. பூங்காவில் பார்வையாளர்கள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது கரோனா பரவல் அதிகரித்துவருவதால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்பேரில் இன்று முதல் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1 நாளை சனிக்கிழமை, ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களுக்குப் பூங்கா மூடப்படும் எனவும், எனவே பூங்காவிற்குப் பார்வையாளர்கள், சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என பவானிசாகர் அணை பிரிவு பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடைக்குமா? இல்ல தனியாத்தான் போகணுமா...