சத்தியமங்கலம் காவலர் அலுவலக குடியிருப்பு அலுவலக வளாகத்தில் ரூ.55 இலட்சம் செலவில் புதியதாக டிஎஸ்பி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த கட்டத்தை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து திங்கள்கிழமை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு ஏடிஎஸ்பி பொன் கார்த்திக்குமார், சத்தி டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், காவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மனைவி துணி மாற்றுவதை படம் பிடித்தவர் மீது புகார் அளித்த கணவர் மீது தாக்குதல்!