ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த கொடுமணல் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் புதன் கிழமை (மே18) அன்று வேலை தொடர்பாக சென்னிமலை ராஜவீதி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் பொன்னுசாமி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சென்னிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து - ஐந்தாவது நபர் சடலமாக மீட்பு