ஈரோடு மாவட்டம் நாதகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஈரோடு செளந்தர் (63). சிம்மராசி, முதல் சீதனம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற நாட்டாமை, சேரன் பாண்டியன், சமுத்திரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாகவும் கதாசிரியராகவும் இருந்துள்ளார்.
இவரது கதையில் வெளியான நாட்டாமை சரத்குமாருக்கு பெரும் பெயரை ஈட்டித் தந்ததுடன், படத்தின் வசனங்களுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்தது.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு செளந்தர் நேற்று (டிச.05) மாலை காலமானார். இதனைத்தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. சினிமா கலைஞர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு