தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்நிலையில் இன்று (மே 08) வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்த திடீர் அறிவிப்பால் ஈரோடு மாவட்டம் ரயில் நிலைய சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கரோனா அச்சம் ஏதுமின்றி வரிசையில் நின்று தங்களுக்குத் தேவையான மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து வரிசையில் நிற்கும் குடிமகன்களுக்கு கிருமி நாசினி அளிக்கப்பட்டும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படா வண்ணம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாகிகள் கூறுகையில், `முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் கூட்டம் அலைமோதுகிறது.
டாஸ்மாக் கடைகள் எவ்வளவு மணி நேரம் இயங்கும் என்பது குறித்து முறையான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை எனத் தெரிவித்தனர்.