ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின். இவர், அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேநீர் கடையின் முன் உள்ள மரத்தடியில் சுற்றித்திரிந்த ஆண் குரங்கு ஒன்று, கவினின் மடியில் அமர்ந்து கொண்டது.
இதைக்கண்டு ஆச்சரியமடைந்த அவர், குரங்கிற்கு பழங்கள், கடலை உள்ளிட்ட உணவுகளை வழங்கினார். கொடுத்த உணவுகளை சாப்பிட்டு விட்டு அவர் மடியிலேயே படுத்து உறங்கியது.
கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் சுற்றி வரும் ஆண் குரங்கு, கவினுடன் நெருங்கி பழகுவதோடு அவரது நண்பர்கள் வந்து அமரும் போது அவர்களுடனும் நெருங்கி பழகுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.