ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மணிமாறன் நேற்று ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல கணேசனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் .
அதிமுக வேட்பாளருடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், "மற்ற நாடுகள் பாராட்டும் அளவிற்கு இந்தியாவில் பாதுகாப்பு நிலவுகிறது. தேசத்தை காப்பதற்கும், தேசத்தில் உள்ள மக்களை காப்பதற்கும் தலைசிறந்த தலைவராக நமது பிரதமர் மோடி விளங்குகிறார்" என்றார்.