ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் மண்டபத்தில் விவசாயிகள் மேற்கு மண்டல மாநாட்டில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;
விவசாயிகளின் கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றுவேன். மேற்கு மண்டல விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கைகளை உறுதியாக நிறைவேற்றுவேன். விவசாயிகளின் நில உரிமைகள் கோரிக்கை வைக்காமலேயே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை தரகர் என்று கொச்சைப்படுத்தி பேசும் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம். விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு நெஞ்சில் ஈரம் இருந்தால் போதும். திமுக அரசு ஆட்சி அமைத்த பின் வேளாண் சட்டங்கள் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரத்து செய்யப்படும்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை திமுக அரசால் வழங்கப்படும். விவசாயிகளின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் உண்மையை விவசாயிகளுடன் கலந்தாலோசித்து தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.