ETV Bharat / state

காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு: சோகத்தில் பெற்றோர்கள் - school student death

ஈரோடு: இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி கீழ்பவானி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

16th age student death
author img

By

Published : Aug 24, 2019, 9:23 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மொடாவாண்டி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மகள் கோகுல சிவரஞ்சனி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

கடந்த 21ஆம் தேதி சைக்கிளில் பள்ளிக்கு சென்ற சிவரஞ்சனி அன்று மாலை வீடு திரும்பவில்லை.

இறந்த மாணவியின் சடலம் மீட்கப்பட்ட வீடியோ

இதனால், பதற்றமடைந்த அவரது பெற்றோர்கள் அவர் படிக்கும் பள்ளியில் விசாரித்துள்ளனர். எங்கு தேடியும் தங்களது மகள் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அலிங்கியம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஒரு சிறுமியின் சடலம் மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கடத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வாய்க்காலில் மிதந்த சடலம் இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிவரஞ்சனியா என அவரது பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அது சிவரஞ்சனிதான் என பெற்றோரும் உறுதிசெய்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:Body:tn_erd_03_sathy_girl_death_vis_tn10009

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அலிங்கியம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் பள்ளி சீருடையுடன் 16 வயது மதிக்கத்தக்க பெண்சடலத்தை கடத்தூர் காவல்துறையினர் மீட்டு விசாரணை
மேற்கொண்டுவருகின்றனர்..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் மொடிவாண்டி பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளார். இரண்டவது மகள் கோகுல சிவரஞ்சனி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 ம் பகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 21 ம் தேதி சைக்கிலுடன் பள்ளிக்கு சென்ற கோகுலசிவரஞ்சனி மீண்டும் திரும்ப வரவில்லை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் உறவினர்கள் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து கடத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கோகுலசிவரஞ்சனியை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அலிங்கியம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் பெண் சடலம் மிதந்ததை கண்டு பொதுமக்கள் கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க்;கு வந்த கடத்தூர் காவல்துறையினர் வாய்க்காலில் மிதந்த சடலத்தை மீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிவரஞ்சனியா என அவரது பெற்றோரை அழைத்து அடையாளம் காண்பித்தனர். சடலத்தை கண்ட சிவரஞ்சனியின் பெற்றோர்கள் அது சிவரஞ்சனிதான் என காவல்துறையினரிடம் தெரிவித்தனர். சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்துவைத்தனர். இச்சம்பவம் குறித்து கடத்தூர் காவல்துறையினர் கொலையா தற்கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனையில் கோகுல சிவரஞ்சனி தன்னை பெற்றோர் மற்ற மகள்களை பார்ப்பது போல பார்க்கவில்லை என்று வருத்தம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.