ஈரோடு, மாணிக்கம்பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்த கார்த்தி என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி, 2016ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின் அச்சிறுமியை கும்பகோணத்துக்கு கடத்திச் சென்றார்.
இதையடுத்து, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதன்பின், வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ, கடத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கார்த்தி கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: தலைமையாசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு: இருதரப்பு போராட்டம்