ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை ஆய்வு செய்த அமைச்சர்கள் - Erode District News

ஈரோடு: கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கீழ்பவானி வாய்க்கலை ஆய்வுச் செய்யும் அமைச்சர்கள்
author img

By

Published : Nov 9, 2019, 9:40 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட மண்அரிப்பு காரணமாக வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் தேக்கம்பாளையம், நாகரணை, சின்னபீளமேடு, மில்மேடு ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை, கரும்புப் பயிர்கள் சேதமடைந்தன.

குறிப்பாக தேக்கம்பாளையத்தில் தண்ணீர் புகுந்ததால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதித்தன. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் சந்தித்து நிவாரண தொகை மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

கீழ்பவானி வாய்க்காலை ஆய்வு செய்யும் அமைச்சர்கள்

பின்னர், உடைப்பு ஏற்பட்ட கீழ்பவானி வாய்க்கால் பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் நாளை மாலைக்குள் கரை சீரமைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பயனற்ற ஆழ்துளைக்கிணறுகள் மழைநீர் சேமிப்புத்தொட்டியாக மாற்றப்படுகிறது: அமைச்சர் காமராஜ்

Intro:Body:tn_erd_03_sathy_minister_kas_vis_tn10009

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு பகுதியை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆய்வு

நாளை மாலைக்குள் சீரமைப்பு பணி முடிவுறும் என அமைச்சர் உறுதி

சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட மண்அரிப்பு காரணமாக வாய்க்கால் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீராக வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால் தேக்கம்பாளையம், நாகரணை, சின்னபீளமேடு, மில்மேடு ஆகிய பகுதியில் சாகுபடி செய்த நெய், வாழை, கருப்புப்பயிர்கள் சேதமடைந்தன. தேக்கப்பாளையத்தில் ஆரம்ப்பள்ளி கட்டடம் மற்றும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதி மக்களை அமைச்சர் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் சந்தித்து 16 வீடுகளுக்கு ரூ.6100 ரூபாயாகவும் குடிசைகளுக்கு ரூ.5000 ரூபாகவும் அரசி, மண்ணெண்ய் மற்றும் வேஷ்டி சேலை, அதிமுக சார்பில் ரூ.5 ஆயிரம் என நிவாரணப் பொருள்கள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு பகுதியை பார்வையிட்டு உடனடியாக வாய்க்கால் கரையை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அடைப்பு ஏற்படுவதற்கு தேவையான மண் மற்றும் எம்சாண்ட் மணல் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். தற்காலிகமாக 25 ஆயிரம் எம்.சாண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்புச்சுவராக ஏற்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். வாய்க்கால் கரையில் முட்செடிகள் வளர்ந்ததால் மக்கள் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டது தெரியமால் போனதாக அமைச்சரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில கால்வாயை சீரமைக்க 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டபோது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அதனை நிறைவேற்ற முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.