ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள கெஞ்சனூர், சிக்கரசம்பாளையம், ராஜன்நகர், புதுவடவள்ளி ஆகிய இடங்களில் அரசின் சார்பில் விலையில்லா இருசக்கர வாகனம், நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், கோட்டாட்சியர் ஜெயராமன் கலந்துகொண்டனர். முதலில் கெஞ்சனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியில்லாமல் ஒருவரையொருவர் உரசிக்கொண்டு பொருள்களை பெற்றுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து, சிக்கரசம்பாளையத்தில் நடந்த விழாவிலும் வரிசையாக வந்த பொதுமக்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு பொருள்கள் வாங்கச் சென்றனர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கிருந்து நகர்ந்தனர். முகக் கவசம் இல்லாமல், தகுந்த இடைவெளி இன்றி மக்கள் ஒன்றாக கூடி நின்றிருந்தது அரசின் தனிநபர் கோட்பாடு காற்றில் பறந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய விதிகளுடன் இயங்க தயாராகும் ஹோட்டல்கள்!