ETV Bharat / state

‘பாலின் தரத்தை உயர்த்தவே உள்ளூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுகிறது’ - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - udumalai radhakrishnan

ஈரோடு: பாலின் தரத்தை உயர்த்தவே உள்ளூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

udumalai radhakrishnan
author img

By

Published : Nov 26, 2019, 9:10 AM IST

பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் கிராமத்தில் 164 ஏக்கர் பரப்பளவில் கால்நடை நிலையம் அமைக்க கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான கட்டடப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. இதில், நிர்வாக அலுவலகக் கட்டிடம், மாட்டுக் கொட்டகை, தீவன உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அடங்கும். புதிய கட்டடங்கள் திறப்பு விழா பகுத்தம்பாளையம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய கட்டடங்களை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து காங்கேயம் இன மாடுகளைப் பார்வையிட்டனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘காங்கேயம் கால்நடை இனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2017இல், இந்த ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டடங்கள் திறந்த வைக்கப்பட்டுள்ளன. இதில் 50 காங்கேயம் இன பசுக்களும் காளை மாடுகளும் உள்ளன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான பசுங்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் இன மாடு ஆராய்ச்சி நிலையம் ஆறு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தேசிய விருதான ’காமதேனு விருது’ வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க: கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் -உடுமலை ராதாகிருஷ்ணன்

Intro:Body:tn_erd_06a_sathy_udumalai_radha_vis_tn10009

பாலில் நச்சுத்தன்மை உள்ளதாக மத்திய அரசின் அறிக்கை குறித்து கால்நடை அமைச்சர் உடுமை ராதாகிருஷ்ணனிடம் கேட்டதற்கு மழுப்பலான பதில்

பால் தரத்தை உயர்த்தவே உள்ளூர் இன மாடுகள் ஆராய்ச்சி நிலையம் அமைப்பு: கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பால் தரத்தை உயர்தவே உள்ளூர் இன மாடுகள் ஆராய்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என பவானிசாகர் அருகே காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இவ்வாறு பேசினார்.

பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையம் கிராமத்தில் 164 ஏக்கர் பரப்பளவில் இந்த கால்நடை நிலையம் அமைக்க கடந்த 2017 ம் ஆண்டு ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான கட்டிடடங்கள் கட்டப்பட்டு தற்போது பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் நிர்வாக அலுவலக கட்டிடம், மாட்டுக்கொட்டகை, தீவன உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அடங்கும். புதிய கட்டிடங்கள் திறப்பு விழா பகுத்தம்பாளையம் கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் திறந்து வைத்து காங்கேயம் இன மாடுகளை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 3 அமைச்சர்களும் காங்கேயம் கால்நடைகளின் முக்கியத்துவம் குறித்து பேசியதோடு வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காங்கேயம் கால்நடை இனங்களை பாதுகாக்க வேண்டும் என நோக்கத்தில் கடந்த 2017 ல் இந்த ஆராய்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கட்டிடங்கள் திறந்த வைக்கப்பட்டுள்ளது. இதில் 50 காங்கேயம் இன பசு மற்றும் காளை மாடுகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான கன்றுக்குட்டிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் இங்கு தரமான தீவனம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆலம்பாடி இன காளை இனத்தை பாதுகாக்கும் பொருட்டு வரும் 28 ம் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஆலம்பாடி இன கால்நடை ஆராய்ச்சி நிலையம் 4 கோடி செலவில் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர் இன மாடு ஆராய்ச்சி நிலையம் 6 கோடி செலவில் அமைக்கப்பட்டு தற்போது இந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு இந்தியாவின் தேசிய விருதான காமதேனு விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின மாடுகளின் எண்ணிக்கையை பெருக்கி தரமான பால் உற்பத்தி செய்து வழங்குவதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றார். தமிழகத்தில் விநியோக்கிக்கப்படும் பாலில் நஞ்சுத்தன்மை இருப்பதாக மத்தியஅரசின் அறிக்கை குறித்து கேட்டபோது அதற்கு சரியான பதிலளிக்காமல் காங்கேயம் மாட்டில் தரம் உள்ளது என மழுப்பலான பதில் அளித்தார்.

பேட்டி:
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.