ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர்மேட்டில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வேளாண்கருவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு குள்ளம்பாளையம், ஒடையாக்கவுண்டன்பாளையம் உள்ளிட்ட நான்கு ஊராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகளை வழங்கினார்.
பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட டிராக்டரை சிறிது தூரம் இயக்கி, தானும் ஒரு விவசாயி என்பதை அமைச்சர் செங்கோட்டையன் நிரூபித்தார். அமைச்சர் டிராக்டர் இயக்கியதைப் பார்த்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையும் படிங்க: கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி - ஆட்டோ ஓட்டிய அமைச்சர் ஜெயக்குமார்