ETV Bharat / state

'சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அறிவிப்பைத் தொடர்ந்து பிளஸ் 2 பொதுத்தேர்வு அறிவிப்பு'

ஈரோடு: சிபிஎஸ்இ பள்ளிகளில் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

senkottaiyan
செங்கோட்டையன்
author img

By

Published : Feb 17, 2021, 2:13 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட உள்விளையாட்டு அரங்கை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்துவைத்தார். மேலும், கபடி, வாலிபால், டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் குழு புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், "சிபிஎஸ்இ பள்ளிகள் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஒன்றன்பின் ஒன்றாகப் பள்ளி தேர்வுகளை அறிவிப்போம். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியைப் பொறுத்தே பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது.

மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவொரு விளையாட்டிலும் கலந்துகொள்ளலாம். எந்த நிபந்தனையும் இல்லை. மாவட்டந்தோறும் அனைத்து விளையாட்டுகளையும் ஒருங்கிணைத்து விளையாட்டு அரங்கம் அமைக்க மத்திய அரசிடம் 35 கோடி ரூபாய் கேட்டுள்ளோம்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

மத்திய அரசிடம் தற்போது போதிய நிதி இல்லாததால் இன்னும் வழங்கப்படவில்லை. நூலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆள்கள் கொண்டு நிரப்பப்படும்" என்றார்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு - பிப்.22 தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.