ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 9ஆவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
இன்று (ஏப்.1) கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குள்பட்ட 9, 10, 11 ஆகிய வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பெண்கள் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் ஆரத்தி எடுத்தும் பூரண கும்பமரியாதை செலுத்தியும் சால்வை அணிவித்தும் வேட்பாளர் செங்கோட்டையனை வரவேற்றனர்.
இதையடுத்து பரப்புரை மேற்கொண்ட அவர், நகராட்சி பகுதியில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த சமயத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் குடிநீர் திட்டபணிகளுக்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் அவர்களது மாநிலங்களுக்கு சென்று விட்டதால் குடிநீர் திட்டத்தை முடிக்கமுடியாமல் போனது.
தற்போது போர்கால அடிப்படையில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் குழாய் அடைப்புகள் கண்டு பிடிக்கப்பட்டு அதனை அகற்றும் பணிக்காக சென்னையிலிருந்து வந்துள்ள குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இரவுக்குள் குழாய் அடைப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் விநியோகம் சீர் செய்யப்படும். பின்னர் சாலைகள் மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்