ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த காவலிபாளையம், காராப்பாடி ஊராட்சிகளில் 96 லட்சம் செலவில் புதிய கட்டடம், மேல்நிலைத்தொட்டி மற்றும் பள்ளி சுற்றுச்சுவர் ஆகியவற்றுக்கு பூமிபூஜை மற்றும் அடிக்கால் நாட்டுவிழாவில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. அண்ணா, பெரியார், ஜெயலலிதா அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அரசிலும் இருமொழி கொள்கை தொடரும்.
மாணவர்கள் நலனை அக்கறை கொண்டு பள்ளிக்கல்வித் துறையில் 13 வல்லுநர்குழு, உயர்க்கல்வியில் 7 பேரும் என 20 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, இக்குழு ஆய்வு செய்து பள்ளி, கல்லூரி திறப்பது குறித்து முதலமைச்சரிடம் ஒப்படைப்பார்கள். அதுமட்டுமின்றி பள்ளி திறப்பது குறித்து மாணவர்கள், பெற்றோரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு அவர்கள் விரும்பும்போது, முதலமைச்சர் ஒப்புதலுடன் பள்ளி திறக்கப்படும். தற்போது பள்ளி திறப்பு வாய்ப்பில்லை” என்றார்.
மேலும், 3, 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாது என வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், நோட்டு என 14 பொருள்களில் 10 பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க...நடிகர் அஜித் பெயரை தவறாகப் பயன்படுத்தக் கூடாது - சட்ட ஆலோசகர் அறிக்கை...!