ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகவேலை ஆதரித்து அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார்.
அப்போது அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும், ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகள் வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,500 வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் வீட்டுக்காரருடன் சண்டை என்றால் பெண்கள் அவர்களது வேட்டியை கல்லில் அடித்துத் கிழித்துவிடுகின்றனர். அதனால் வாஷிங் மெஷின் வழங்கப்படுகிறது என நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொகுதியில் உள்ள குழந்தைக்கு கூட என் பெயர் தெரியும்! - ஜெயக்குமார்