ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கட்டு பகுதியில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சருடன் நடந்த கல்வி அலுவலர்களின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும் பேசப்பட்டது.
தனியார் பள்ளகளில் ஆன்லைன் கல்வியை எப்படி முறைப்படுத்துவது குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்குப் பதிலளிக்க உள்ளோம். அதேபோல உயர் நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த அறிவுறுத்துவோம்.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு நடைபெறாது. தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பரப் பலகை வைக்கக் கூடாது என்று கூறியுள்ளோம். மீறி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தினம் 63 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை - முதலமைச்சர் தகவல்